Tuesday, March 17, 2009

காத்திருப்பு

ஒரு நாள்
நாம் இருவரும்
ஒருவருக்கொருவர்
இல்லாமல் ஆனோம்.
ஒரு முறை
பார்த்துக்கொள்வதற்குக் கூட
எதுவும் இல்லாமல் போனது.
கசப்பான நினைவுகளாய்
எஞ்சி இருப்பதைக் கூட
இருவரும் விரும்பவில்லை.
உயிர் பிரியும்
தருணம் போல
நம் உறவும்
முறிந்து போனது....
நெடு நாள் காத்திருந்த
அவரவர் பாதைகளில்
நாம் விலகிச்சென்றோம்.

பி.கு.: நாம் இருவரும் அதற்குப்பின் ஒருவரை ஒருவர் நினைதுக்கொள்ளகூட இல்லை.

No comments:

Post a Comment